×

பாஜ எம்பி பிரிஜ் பூஷனின் பாலியல் அத்துமீறல் போலீசார் முன் நடித்து காட்டிய சங்கீதா போகத்

புதுடெல்லி: பாஜ எம்பியும் மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் தன்னிடம் எவ்வாறு பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் முன் மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் நடித்து காட்டினார். மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்த பின்னர் மல்யுத்த வீராங்கனைகள் தங்களது போராட்டத்தை 15 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் டெல்லி பெண் போலீசார் பாலியல் புகார் கூறிய சங்கீதா போகத்தை டெல்லியில் உள்ள பிரிஜ் பூஷனின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு, பிரிஜ் பூஷனின் பாலியல் துன்புறுத்தலுக்கு வழிவகுத்த நிகழ்வுகளை நடித்துக்காட்டும்படி கேட்டுக்கொண்டனர். மேலும் பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளான இடங்களை நினைவுபடுத்தும்படியும் அறிவுறுத்தினார்கள்.

* வீராங்கனைகளுக்கு எதிராக வழக்கு
மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் ஆகியோருக்கு எதிராக அடல் ஜன் கட்சியின் தேசிய தலைவர் பாம் பாம் மகராஜ் நவுஹாதியா மனு தாக்கல் செய்தார். அவர்கள் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது டெல்லி போலீசார், மல்யுத்த வீராங்கனைகள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் எதுவும் பேசவில்லை என்றனர். மேலும் வழக்கை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தினார்கள். இதனையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* தேர்தல் பணி தொடக்கம்
ஒன்றிய அமைச்சர் அனுராக்தாக்கூர் அளித்த வாக்குறுதிப்படி இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு ஜூன் 30ஆம் தேதி ேதர்தலை நடத்த வசதியாக இந்திய ஒலிம்பிக் சங்கம் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விரைவில் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட உள்ளார். தேர்தல் தொடர்பாக ஓரிரு நாட்களில் சுற்றறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள பிரிஜ்பூஷன்சிங் அல்லது அவரது உறவினர்கள் தேர்தலில் போட்டியிட அரசு அனுமதிக்காது என்று அனுராக் தாக்கூர் உறுதி அளித்துள்ளார்.

The post பாஜ எம்பி பிரிஜ் பூஷனின் பாலியல் அத்துமீறல் போலீசார் முன் நடித்து காட்டிய சங்கீதா போகத் appeared first on Dinakaran.

Tags : BJP ,Brij Bhushan ,Sangeeta Phogat ,New Delhi ,Wrestling Federation ,president ,
× RELATED ஆர்எல்டி பிரமுகர் கட்சிக்கு முழுக்கு